தமிழ்நாடு

tamil nadu

உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு நீரஜ் சோப்ரா பரிந்துரை

By

Published : Feb 2, 2022, 9:47 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, 2022ஆம் ஆண்டுக்கான லாரஸ் உலக திருப்புமுனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Neeraj Chopra nominated for Laureus World Breakthrough of the Year Award
Neeraj Chopra nominated for Laureus World Breakthrough of the Year Award

லண்டன்: லாரஸ் உலக திருப்புமுனை விருது என்பது உலக விளையாட்டு போட்டிகளில் திருப்புமுனை நிகழ்த்தும் தனிநபர் அல்லது அணிகளின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.

இந்த விருது விளையாட்டு விருதுகளில் மிக உயரியதாக கருதப்படுகிறது. இந்த விருதானது டென்னிஸ் வீரர்களான ரஃபேல் நடால், நவோமி ஒசாகா, ஃபார்முலா 1 கார் பந்தய சாம்பியனான நிகோ ரோஸ்பெர்க் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான லாரஸ் உலக திருப்புமுனை விருதுக்கு 6 பேரில் ஒருவராக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலகளவில் சிறந்து விளங்கும் 71 விளையாட்டு ஜாம்பவான்களை கொண்ட நடுவர் குழு ஏப்ரல் மாதம் வெற்றியாளரை அறிவிக்கும்.

இந்தப் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை எம்மா ரடுகானு, டென்னிஸ் வீரர் டேனில் மெட்வெடேவ், கால்பந்து வீரர் பெட்ரி, தடகள வீரர் யூலிமர் ரோஜாஸ், நீச்சல் வீரர் அரியர்னே டிட்மஸ் ஆகியோர் உள்ளனர்.

ஈட்டி எறிதல் பிரிவில் சிறந்து விளங்கும் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இது 120 ஆண்டுகளில் ஈட்டி எறிதலில் இந்தியா பெற்ற முதல் தங்கப்பதக்கம்.

இதையும் படிங்க:ஐசிசி டி20 தரவரிசை: 4ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்

ABOUT THE AUTHOR

...view details