தமிழ்நாடு

tamil nadu

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: 3-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி! அரையிறுதிக்கு தகுதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 9:48 PM IST

ஜூனியர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

India beat neatherlands and reaches semifinals
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

கோலாலம்பூர்: ஜூனியர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடர் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பங்கேற்றுள்ளன. இதில் இந்திய அணி 'சி' பிரிவில் உள்ளது.

லீக் சுற்றில் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 போட்டி என 3 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் ஸ்பெயின் அணியிடம் மட்டும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. லீக் சுற்றின் முடிவில் ஸ்பெயின் அணி முதல் இடத்தையும், இந்திய அணி 2வது இடத்தையும் பிடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று (டிச.12) நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய அணி - நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் 5வது நிமிடமே நெதர்லாந்து அணியின் வீரர் போயர்ஸ் டிமோ கோல் அடித்து கணக்கை தொடங்கி வைக்க, இதைத்தொடர்ந்து மற்றொரு கோலை வென் டர் ஹய்தின் 16வது நிமிடத்தில் அடித்தார்.

ஆட்டத்தின் பாதி நேர முடிவுவரை, ஒரு கோல் கூட அடிக்காத இந்திய அணி, அதன்பின் 34, 35 என அடுத்தடுத்த நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இந்த கோல்களை லாலாகே ஆதித்யா அர்ஜுன் மற்றும் அரிஜித் சிங் ஹண்டல் அடித்தனர். அதனைத்தொடர்ந்து 44வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஹார்டென்சியஸ் ஒலிவியர் கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.

அதன்பின், சுதாரித்துக்கொண்ட இந்திய அணி 52 மற்றும் 57வது நிமிடங்களில் கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் 3-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் உத்தம் சிங் கோல் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி வரும் 14ஆம் தேதி ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:U19 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details