தமிழ்நாடு

tamil nadu

Asian Games 2023: ஜாப்பானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 9:20 PM IST

Indian hockey team: ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவருக்கான ஹாக்கி இறுதி போட்டியில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.

Indian hockey team wins gold
Indian hockey team wins gold

ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டு தொடர் சினாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியைச் சந்தித்தது. தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் ஹாட்டை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க தவறினார்.

பின்னர் 25வது நிமிடத்தில் மன்ப்ரீத் சிங் இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் கோல் அடிக்க இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதன் பின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு வழியாக ஜப்பான் அணியின் வீரர் கென்டா தனகா கோல் அடித்தார்.

ஆனால் 59வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா தனது 5வது கோலை அடித்தது. இறுதியில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி 2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாகத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

அதே நேரம், ஹாக்கி இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா 22வது தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:ஆசிய விளையாட்டில் இந்தியா பதக்க அறுவடை! எந்ததெந்த விளையாட்டுல என்னென்ன பதக்கம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details