தமிழ்நாடு

tamil nadu

கேல் ரத்னா விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி பரிந்துரை

By

Published : Jun 2, 2020, 7:08 PM IST

டெல்லி: இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பெயர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Hockey india
Khel Ratna Award 2020

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் விளையாட்டு வீராங்கனை வந்தனா கட்டாரியா, மோனிகா மாலிக், ஆண்கள் ஹாக்கி அணி வீரர் ஹர்மனப்ரீத் சிங் ஆகியோரின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வாழ்நாள் சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் மேஜர் தயான்சந்த் விருதுக்கு ஆர் பி சிங் மற்றும் துஷார் கண்டேகர் ஆகியோரின் பெயரும், துரோணாச்சார்யா விருதுக்கு பயிற்சியாளர்கள் பி ஜே கரியப்பா, ரோமேஷ் பதானியா ஆகியோரின் பெயர்கள் பிரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ராஜீவ் காந்த் கேல் ரத்னா விருதுக்கு கடந்த 2016, ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டங்களில் பல்வேறு சாதனை புரிந்தவரின் பெயர் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரானி ராம்பால் 2017ஆம் ஆண்டு பெண்கள் ஆசிய கோப்பை, 2018ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டு தொடரில் வெள்ளிப்பதக்கம் மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் திருப்புமுனை கோல் அடித்து இந்திய அணியை ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற வைத்தது என பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

அதேபோல் இவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் பெண்கள் ஹாக்கி அணி ரேங்க் பட்டியலில் முதல் முறையாக உலக அளவில் இந்தியா 9ஆவது இடம் பிடித்தது. 2016ஆம் ஆண்டு அர்ஜூனா விருது, 2020ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள இவர், ஆண்டின் சிறந்த தடகள வீரர் என்ற கெளரவத்தையும் பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான விருதுக்கான பரிந்துரை குறித்து ஹாக்கி இந்தியா தலைவர் முகமது முஸ்தாக் அகமது கூறியதாவது:

"கடைசியாக கேல் ரத்னா விருது பெற்ற ஹாக்கி வீரர் சர்தார் சிங். இவருக்கு அடுத்து தற்போது ராணி அந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் பெண்கள் ஹாக்கி அணியில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த உயரிய விருது பெறுவதற்கு அவர் மிகவும் தகுதியானவர்.

விளையாட்டு துறை சார்பில் இந்த விருதுகள் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 தேதி வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details