தமிழ்நாடு

tamil nadu

பாலன் டி ஓர் ட்ரீம் அணி: மெஸ்ஸி, ரொனால்டோ, மரடோனாவுக்கு இடம்!

By

Published : Dec 15, 2020, 3:33 PM IST

பாலன் டி ஓர் ட்ரீம் அணியில் நட்சத்திர கால்பந்து வீரர்களான லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, மறைந்த டியாகோ மரடோனாவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Messi, Ronaldo, Pele, Maradona included in Ballon d'Or Dream Team
Messi, Ronaldo, Pele, Maradona included in Ballon d'Or Dream Team

பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் இந்தாண்டுக்கான பாலன் டி ஓர் ட்ரீம் அணி இன்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 140 பத்திரிகையாளர்கள் சேர்ந்து இறுதியான 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர். மேலும் இப்பட்டியலில் 1956 முதல் 1994ஆம் ஆண்டு வரையிலான ஐரோப்பியர் அல்லாத கால்பந்து வீரர்களையும் அணியில் தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி இன்று வெளியிடப்பட்ட பாலன் டி ஓர் ட்ரீம் அணியில் தற்போதுள்ள நட்சத்திர வீரர்களான அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணியின் ரொனால்டினோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேசமயம் மறைந்த கால்பந்து ஜாம்பவான்கள் டியாகோ மரடோனா, கோல் கீப்பர் லெவ் யச்சின் பீலே, கஃபு, பாவ்லோ மால்தினி, ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் ஆகியோரது பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பாலன் டி ஓர் ட்ரீம் அணி: லெவ் யச்சின் (கோல் கீப்பர்), கஃபு, பாவ்லோ மால்தினி, ஃபிரான்ஸ் பெக்கன்பவுர்,லோதர் மத்தாஸ், சேவி, பீலே, டியாகோ மரடோனா, கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, ரொனால்டினோ.

இந்த அணியில் இடம்பிடித்துள்ள ரொனால்டோ ஐந்துமுறையும், மெஸ்ஸி ஆறு முறையும் பாலன் டி ஓர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த மும்பை - ஜாம்ஷெட்பூர் ஆட்டம்!

ABOUT THE AUTHOR

...view details