தமிழ்நாடு

tamil nadu

ஐஎஸ்எல் : ஒடிசா எஃப்சியுடன் மோதும் சென்னையின் எஃப்சி!

By

Published : Jan 13, 2021, 9:41 AM IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ISL 7: Odisha, Chennaiyin hope to get three points in reverse fixture
ISL 7: Odisha, Chennaiyin hope to get three points in reverse fixture

கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பாம்போலியம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

சென்னையின் எஃப்சி:

நடப்பு ஐஎஸ்எல் சீசனில் சென்னையில் எஃப்சி அணி தொடக்க போட்டிகளில் சறுக்கினாலும், தற்போது மீண்டும் தனது வெற்றிப் பயணத்திற்குத் திரும்பியுள்ளது.

இந்த சீசனில் இதுவரை 10 லீக் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னையின் எஃப்சி அணி இரண்டு வெற்றி, மூன்று தோல்வி, ஐந்து போட்டிகளை டிராவில் முடித்துள்ளது. இதன்மூலம் 11 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இனி வரும் போட்டிகளிலும் சென்னையின் எஃப்சி அணி வெற்றிபெற்று, மீண்டும் ஐஎஸ்எல் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஒடிசா எஃப்சி:

நடப்பு ஐஎஸ்எல் சீசனில் ஒடிசா எஃப்சி அணி இதுவரை பங்கேற்ற 10 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றியைச் சந்தித்துள்ளது.

மீதமுள்ள ஒன்பது போட்டிகளில் 3 போட்டிகளை டிராவிலும், 6 போட்டிகளில் தோல்வியையும்ச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் இனிவரும் போட்டிகளில் ஒடிசா எஃப்சி அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த பெங்களூரு எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம்!

ABOUT THE AUTHOR

...view details