தமிழ்நாடு

tamil nadu

ஐஎஸ்எல்: கோல் மழை பொழிந்த மும்பை சிட்டி; திணறிய ஒடிசா!

By

Published : Feb 25, 2021, 6:37 AM IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ISL 7: Mumbai City FC thrash Odisha FC 6-1
ISL 7: Mumbai City FC thrash Odisha FC 6-1

கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடர் பிளே ஆஃப் சுற்றை எட்டிவிட்டது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

போட்டி தொடங்கிய 9ஆவது நிமிடத்திலேயே ஒடிசா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திய டியாகோ மௌரிசியோ கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.

அதன்பின் அட்டாக்கிங் ஆட்டத்தில் இறங்கிய மும்பை அணிக்கு ஒபேச்சே ஆட்டத்தின் 13, 43 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை அடிக்க, பிபின் சிங் மற்றும் காட்டார்டு ஆகியோர் தங்களது பங்கிற்கு 38 மற்றும் 44ஆவது நிமிடங்களில் கோலடித்து அசத்தினர்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அட்டாக்கிங் ஆட்டத்தை தொடர்ந்த மும்பை சிட்டி எஃப்சி அணி ஆட்டத்தின் 47, 86ஆவது நிமிடங்களில் பிபின் சிங் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தார்.

இதனால் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இதையும் படிங்க: மம்தா கட்சியில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

ABOUT THE AUTHOR

...view details