தமிழ்நாடு

tamil nadu

ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த கேரளா - ஒடிசா ஆட்டம்!

By

Published : Feb 11, 2021, 10:47 PM IST

கேரளா பிளாஸ்டர்ஸ் ஒடிசா எஃப்சி அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற ஐஎஸ்எல் லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ISL 7: Kerala miss out on another win, held to draw by Odisha
ISL 7: Kerala miss out on another win, held to draw by Odisha

இந்தியன் சூப்பர் லீக்கின் ஏழாவது சீசன் தற்போது பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணியை கோலடிக்க விடாமல் தடுத்தனர். இருப்பினும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா அணியின் டியாகோ மொரிசியோ 45ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஒடிசா எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஜோர்டன் முர்ரே கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார். அவரைத் தொடர்ந்து 68ஆவது நிமிடத்தில் கேரி ஹூப்பரும் கோலடிக்க கேரளா அணி முன்னிலைப் பெற்றது.

அதன்பின் ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் டியாகோ மொரிசியோ மீண்டுமொரு கோலடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இருப்பினும் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் என்ற கணக்கில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:இரண்டாவது டெஸ்ட் போட்டி: களைகட்டிய சேப்பாக்கம்!

ABOUT THE AUTHOR

...view details