தமிழ்நாடு

tamil nadu

சூப்பர்மேனாக மாறிய விராட் கோலி.. ஆட்டத்தையே மாற்றிய அந்த தருணம்! வைரலாகும் வீடியோ!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 3:40 PM IST

Virat Kohli: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சிக்சர் சென்ற பந்தை விராட் கோலி தாவி தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் டி20 அணிக்கு கோலி திரும்பி இருந்தாலும் அவரது ஆட்டம் இன்னும் மாறவேயில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விராட் கோலி
Virat kohli

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடியது. இத்தொடர் நேற்றுடன் (ஜன. 17) நிறைவு பெற்றது. இத்தொடரை இந்திய அணி 3-கு 0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், நேற்று (ஜன. 17) நடைபெற்ற 3வது டி20 போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 2வது சூப்பர் ஓவரிலேயே இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜன. 17) நடைபெற்றது 3வது டி20 போட்டி. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. 22 ரன்கள் எடுத்திருந்த போதே 4 விக்கெட்களை இழந்து இருந்தது.

ரோகித் சர்மா - ரிங்கு சிங்: ஆனால் அதன்பின் களத்திற்கு வந்த ரிங்கு சிங் கேப்டன் ரோகித் சர்மாவுடன் கைகோர்த்து பொறுப்புணர்வுடன் தனது சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். இந்த இருவரையும் ஆப்கானிஸ்தான் அணியால் கடைசி வரை தடுக்க முடியாமல் போனதன் விளைவே சற்றும் எதிர்பாராத ஒரு டார்கெட்டை இந்திய அணி ஆப்கானுக்கு நிர்ணயித்தது.

20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் இந்திய அணி சேர்த்தது. தனக்குண்டான பாணியிலேயே ரன்கள் குவித்து வந்த ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுபக்கம் ரோகித் சர்மாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரிங்கு சிங்கோ 69 ரன்களை விளாசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது. மைதானத்தில் இருந்தவர்களோ அல்லது தொலைக்காட்சி மூலம் பார்த்து கொண்டிருந்தவர்களோ ஆப்கானிஸ்தான் இப்படி ஒரு அபார ஆட்டத்தை வெளிபடுத்தும் என நினைத்து பார்க்கவில்லை. சிறப்பாக விளையாடி ஆப்கான் வீரர்களில் 3 பேர் அரைசதத்தை கடந்தனர்.

நல்ல தொடக்கத்தை அளித்த குர்பாஸ் மற்றும் சத்ரான் தலா 50 ரன்களை விளாசியதற்கு பின்னர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதேபோல் இவர்களை தொடர்ந்து களம் வந்த குல்பாடின் நைப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.

விராட் கோலி: இருப்பினும் ஆப்கான் அணியால் போட்டியை சமன் மட்டுமே செய்ய முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் விராட் கோலியே. 16.5 ஓவரில் கரீம் ஜன்னத் அடித்த பந்து சிக்சர் நோக்கி சென்றது. அப்போது லான் ஆனில் நின்ற விராட் கோலி பந்தை சிக்சர் செல்ல விடாமல் அதை தாவி தடுத்து விட்டார்.

பந்தை பிடிக்க முடியாது என்ற தெரிந்த கோலி அதனை தடுத்து 5 ரன்களை அணிக்கு சேமித்து கொடுத்தார். ஒரு வேளை அந்த பந்து சிக்சராக மாறி இருந்தால் சூப்பர் ஓவர் என்ற பேச்சுகே இடம் இல்லாமல் போய் இருக்கும். பொதுவாக சொல்வதுண்டு, "ஒரு அணிக்கு ஒவ்வொறு ரன்களும் முக்கியம் என்று" அதற்கு சிறந்த உதாரணம் விராட் கோலியின் அந்த சிறப்பான ஃபீல்டிங்.

இதையும் படிங்க:இளைஞரணி மாநாடு; படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details