தமிழ்நாடு

tamil nadu

ஒரே ஓவரில் 7 சிக்சர்கள்: மிரட்டிய ஆப்கான் வீரர்!

By

Published : Jul 31, 2023, 12:00 PM IST

Updated : Jul 31, 2023, 12:14 PM IST

ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் சித்திக்குல்லா அடல் மிரட்டி உள்ளார்.

காபூல் பிரிமியர் லீக்
kabul premier league

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் காபூல் பிரிமியர் லீக் டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 29) நடைபெற்ற ஆட்டத்தில் ஷகீன் ஹண்டர்ஸ் மற்றும் அபாசின் டிஃபெண்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி ஆப்கானிஸ்தானில் அயோபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஷகீன் ஹண்டர்ஸ் அணியின் தொடக்க விரர்கள் ஆடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். அதன் பின் மிடில் ஆடரில் களம் புகுந்த சித்திக்குல்லா அடல் பந்துகளை நாலா பக்கமும் சிதறடித்தார். சித்திக்குல்லா அடல் பேட் செய்த போது அமீர் சசாய் 19 வது ஓவர் வீச வந்தார். முதல் பந்தை அமீர் சசாய் வீச அதை சிக்சருக்கு பறக்கவிட்டார். அந்த பந்து நோ பால் ஆக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 7 ரன்கள் கிடைத்தது. அதன் பின் அகல பந்து வீசி பவுண்டரிக்கு சென்றதால் 5 ரன்கள் கிடைத்தது.

அதனை அடுத்து வீசிய ஆறு பந்துகளையும் சித்திக்குல்லா அடல் சிக்சருக்கு விளாசி மிரட்டினார். அமீர் சசாய் வீசிய அந்த ஓவரில் மட்டும் 48 ரன்கள் ஷகீன் ஹண்டர்ஸ் அணிக்கு கிடைத்தது. இவர் மட்டும் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் உட்பட 118 ரன்கள் எடுத்து அசத்தினார். ஷகீன் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், சித்திக்குல்லா அடல் ஒரே ஓவரில் 7 சிக்சரிகள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக ஒரே ஓவரில் ரூதுராஜ் கெய்க்வாட் 7 சிக்சர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங், தென்னாபிரிக்கா அணி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கீரன் போலார்ட் மற்றும் அமெரிக்க கிரிக்கெட் வீரர் ஜாஸ்கரன் மல்ஹோத்ரா ஆகியோர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உள்ளனர்.

அதே போல், ஸ்டூவர்ட் பிராட் 2007ல் நடந்த டி-20 போட்டியில் யுவராஜ் சிங் எதிராக 36 ரன்களும், டான் வான் பங்கே அதே ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ் எதிராக 36 ரன்களும் வழங்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அமீர் சசாய் சித்திக்குல்லா அடல் எதிராக 48 ரன்கள் வழங்கி ஒரு மோசமான சாதனையை படைத்து உள்ளார்.

இதையும் படிங்க:ஆஷஸ் டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலியா அணிக்கு 384 இலக்கு!

Last Updated : Jul 31, 2023, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details