தமிழ்நாடு

tamil nadu

IND vs WI: அணிக்கும் திரும்பும் ரோஹித்; பும்ராவுக்கு ஓய்வு

By

Published : Jan 27, 2022, 8:50 AM IST

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்ட கேப்டன் ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றுள்ளார்.

IND vs WI
IND vs WI

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கு இந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 தொடர்களில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டி தொடர் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

டி20 தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த இரு தொடருக்குமான தலா 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து விலகிய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். கால் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஜடேஜா இன்னும் முழுமையாக குணமடையாததால் இரு தொடர்களிலும் சேர்க்கப்படவில்லை. மேலும், நீண்ட நாள்களாக தொடர்ச்சியாக அனைத்து சுற்றுப்பயணங்களிலும் விளையாடும் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு இந்த இரு தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இரு தொடர்களுக்கும் துணை கேப்டனாக செயல்படும் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட மாட்டார் என்றும் மற்ற போட்டிகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே. எல். ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ரவி பீஷ்னாய், அக்சர் படேல், யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே. எல். ராகுல் (துணை கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட், ஷிகர் தவாண், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ரவி பீஷ்னாய், யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், குல்தீப் யாதவ்

இதையும் படிங்க:ரயில்வே தேர்வு குளறுபடி - பிகார் மாநிலத்தில் பந்த்க்கு அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details