தமிழ்நாடு

tamil nadu

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்த ரிஷப் பந்த்

By

Published : Jan 13, 2022, 11:02 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் சதமடித்தார்.

சதமடித்த ரிஷப் பந்த்
சதமடித்த ரிஷப் பந்த்

கேப் டவுன்:இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து. இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது. தற்போது வெற்றியைத் தீர்மானிக் கூடிய கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய சாதனையை இந்தியா படைத்துவிடும். இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் 223/10 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 10 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் மட்டுமே அடித்தது. இதில் கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி 72 (166) ரன்கள் குவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இந்திய அணியில், ராகுல் (10), அகர்வால் (7), புஜாரா (9), ரஹானே (1) ஆட்டமிழந்தனர். பின்னர் களத்திலிருந்த விராட் கோலி, ரிஷப் பந்த் பார்ட்னர்ஷிப் ரன்களை சேர்த்து வந்தது. அதுசமயம் நெகிடி பந்துவீச்சில், விராட் கோலி 143 பந்துகள் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்தூல் தாகூர், உமேஷ் யாதவ் ஆட்டமிழந்தனர். இவர்களுடன் மறுமுனையில் விளையாடிய ரிஷப் பந்த் மட்டும் ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடினார். பின்னர் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என விளாசி 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமி 10 பத்துகளுக்கு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜஸ்பரீத் பும்ரா களமிறங்கினார்.

பின்னர் ரபாடாவின் பந்துவீச்சில் ரிஷப் பந்த், ஒரு பவுண்டிரியும், கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். அடுத்து யான்சன் பந்துவீச்சில் ஒரு ரன் எடுத்து, 133 பந்துகளுக்கு சதத்தை பூர்த்தி செய்தார். தற்போது இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, 208 ரன்கள் முன்னிலை வகித்து களத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details