தமிழ்நாடு

tamil nadu

Pakistan Vs Afghanistan: தொடர் தோல்வியில் பாகிஸ்தான்.. 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 1:48 PM IST

Updated : Oct 23, 2023, 10:10 PM IST

World Cup Cricket 2023 : ஐசிசி உலகக் கோப்பையின் 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை:ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை தொடர் கடந்த 13ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் நடப்பு சாம்பியான இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதும் 22வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக் - இமாம் உல் அக் களம் இறங்கினர். 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் எடுத்த நிலையில், இந்த அணி 11வது ஓவரின் முதல் பந்தில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. இமாம் உல் அக் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் வந்த கேப்டன் பாபர் அசாம், அப்துல்லா ஷபீக்வுடன் கைக்கோர்த்தார். இந்த கூட்டணி சிறிது நேரம் நிடிக்க, ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, ஷ்பீக்கை வீழ்த்தினார். அரைசதம் விளாசிய அவர் 58 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் 8, சவுத் ஷகீல் 25 ரன்கள் என அடுத்தடுத்து ஒருபக்கம் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் பாபர் அசாம் அவரது நிதான ஆட்டத்தின் மூலம் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். தொடக்க முதலே சிறப்பாக பந்து வீசி வந்த நூர் அகமது, 74 ரன்கள் எடுத்த பாபரை வீழ்த்தினார்.

தொடர்ந்து ஷதாப் கான் - இப்திகார் அகமது கூட்டணி அணிக்கு ரன்களை சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினர். தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் கூட்டணி நிதானமாக ஓவருக்கு 5, 6 ரன்களை அடித்து விக்கெட்களை இழக்காமல் சிறப்பாக ஆடி வந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது.

21 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்த போது, ஷஹீன் அப்ரிடி வீசிய ஷாட் பாலை குர்பாஸ் அடிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக எட்ஜ் ஆக, உசாமா மிர்ரின் கையில் சிக்கியது. இதனால் குர்பாஸ் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்த் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சதம் நெருங்கிய இப்ராஹிம் சத்ரான் 87 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் ரஹ்மத் ஷா - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கூட்டணி சேர, இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் விளாசினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிறகு 286 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரிடி மற்றும் ஹசன் அலி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையும் படிங்க:11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் களமிறங்கும் பாகிஸ்தான்.. ஷாக் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்?

Last Updated :Oct 23, 2023, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details