தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் ராஜஸ்தான் Vs டெல்லி

By

Published : May 11, 2022, 3:47 PM IST

ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் ராஜஸ்தான் Vs டெல்லி
ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் ராஜஸ்தான் Vs டெல்லி

ஐபிஎல் 2022 தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டம் இரவு (மே 11) 7:30 மணிக்கு மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில், 7 வெற்றிகள் 4 தோல்விகள் என்ற கணக்கில் 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. மறுபுறம் டெல்லி அணி 11 போட்டிகளில், 5 வெற்றிகள் 6 தோல்விகள் என்ற கணக்கில் 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி தனது வெற்றிப்பாதையை தக்க வைத்துக் கொள்ள விரும்பும். மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.ஆகவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.இரு அணிகளின் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், ஸ்ரீகர் பாரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த்(கேப்டன்/கீப்பர்), ரோவ்மன் பவல், அக்சர் படேல், ரிபால் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மயர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க: ஐ.பி.எல். கிரிக்கெட்: 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

ABOUT THE AUTHOR

...view details