தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் 2023 - வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகல்!

By

Published : Apr 27, 2023, 3:14 PM IST

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக, நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார்.

Washington
ஐபிஎல்

ஹைதராபாத்: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.

நடப்பு சீசனில் ஹைதராபாத் அணிக்காக வாஷிங்டன் சுந்தர் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் 6 போட்டிகளில் விக்கெட் எடுக்காத இவர், கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து மொத்தம் 60 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், தொடையில் காயம் ஏற்பட்டதால் வாஷிங்டன் சுந்தர் நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எஞ்சியுள்ள போட்டிகளில் அவருக்குப் பதிலாக களமிறங்கவுள்ளது யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடப்புத் தொடரில் ஹைதராபாத் அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல்லில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அதற்கு முன்பு பெங்களூரு மற்றும் புனே அணிகளுக்காக ஐபிஎல்லில் விளையாடினார்.

இதையும் படிங்க: CSK vs RR: அதிரும் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை அலற விடுமா 'விசில்' சத்தம்?

ABOUT THE AUTHOR

...view details