தமிழ்நாடு

tamil nadu

RCB vs MI: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு

By

Published : Apr 9, 2022, 7:54 PM IST

ஐபிஎல் தொடரின் 18ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ipl-2022-rcb-win-toss-elect-to-bowl-against-mi
ipl-2022-rcb-win-toss-elect-to-bowl-against-mi

புனே: ஐபிஎல் சீசனின் 18ஆவது லீக் ஆட்டம் இன்று (ஏப். 9) எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இதற்கு முன்னதாக பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "முந்தைய போட்டிகளைவிட இந்த போட்டியில் கூடுதலாக போராடுவோம். இனி வரும் அனைத்து போட்டிகளும் எங்களுக்கு முக்கியமான போட்டிகளாகும். முதல் வெற்றிக்காக காத்திருக்கிறோம்" என்றார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்: ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ராமன்தீப் சிங், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனத்கட், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள்:ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

இதையும் படிங்க:CSK vs SRH: சென்னைக்கு 4ஆவது தோல்வி... ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி...

ABOUT THE AUTHOR

...view details