தமிழ்நாடு

tamil nadu

SRH vs MI:  ஹைதராபாத் பிளே ஆஃப் கனவு பலிக்குமா..?

By

Published : May 17, 2022, 3:36 PM IST

ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ipl 2022 mumbai vs hyderabad match preview
ipl 2022 mumbai vs hyderabad match preview

மும்பை: ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 17) 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், ஹைதராபாத் அணி, 12 போட்டிகளில் 5 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 8ஆவது இடத்தில் உள்ளது.

மறுப்புறம் மும்பை அணி 12 போட்டிகளில் 3 வெற்றிகள் 9 தோல்விகள் என்ற கணக்கில் 10ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி பிளே ஆஃப் செல்ல முடியாது. ஆனால், ஹைதராபாத் அணிக்கு ஒரு வாய்ப்புள்ளது. அதாவது, ஹைதராபாத் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், 14 புள்ளிகள் கிடைக்கும்.

இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியும். இந்த வாய்ப்பும் 4ஆவது இடத்தில் உள்ள டெல்லி அணி மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே கிடைக்கும். இதேபோன்ற ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு, 59ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு கிடைத்தது.

ஆனால், மும்பை அணி சென்னை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வாய்ப்பை பறித்தது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெல்லுமா அல்லது சென்னையை போல் வீழுமா என்பதை காண ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ராகுல் புத்தி, ராமன்தீப் சிங், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், பசில் தம்பி, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரிட் பும்ரா, ஜெய்தேவ் உனத்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ரிலே மெரிடித் , டைமல் மில்ஸ், அர்ஷத் கான், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜூயல், இஷான் கிஷன்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், பிரியம் கார்க், விஷ்ணு வினோத், கிளென் பிலிப்ஸ், ஆர் சமர்த், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், மார்கோ ஜான்சன், ஜே சுசித், ஸ்ரேயாஸ், புவனேஷ்வர் குமார், சீன் அபோட், கார்த்திக் தியாகி, சௌரப் திவாரி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக், டி நடராஜன்.

இதையும் படிங்க:பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

ABOUT THE AUTHOR

...view details