தமிழ்நாடு

tamil nadu

MI vs LSG: தோல்விகளிலிருந்து மீளுமா ஜாம்பவான் அணி..?

By

Published : Apr 16, 2022, 3:33 PM IST

ஐந்து தொடர் தோல்விகளுக்கு பிறகு மும்பை அணி இன்று லக்னோ அணியுடன் மோதுகிறது.

ipl-2022-mumbai-indians-win-toss-opt-to-field-against-lucknow
ipl-2022-mumbai-indians-win-toss-opt-to-field-against-lucknow

மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 25 போட்டிகள் முடிந்துள்ளன. இன்று (ஏப். 16) மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் சீசன்களில், மும்பை அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. 8 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆனால், இந்த சீசனில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. இந்த சீசனில் இன்னும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, சென்னை அணி நான்கு தொடர் தோல்விகளுக்கு பிறகு ஐந்தாவது போட்டியில் அபார வெற்றிபெற்றது. அதேபோல மும்பை அணி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் மிகவும் துவண்டுபோய்விட்டனர்.

இந்த நிலையில், இன்று மும்பையின் பிராபோர்ன் மைதானத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்விகளிலிருந்து மீண்டு தொண்டு வெற்றியை குவிக்குமா அல்லது ஏழாவது முறையாக தோற்குமா என்பதை காண ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்:ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(கீப்பர்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னாய்.

இதையும் படிங்க:SRH vs KKR: ஹைதராபாத் அணி அபார வெற்றி

ABOUT THE AUTHOR

...view details