தமிழ்நாடு

tamil nadu

GT vs RCB: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்

By

Published : Apr 30, 2022, 3:26 PM IST

Updated : Apr 30, 2022, 7:38 PM IST

ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ipl-2022-match-43-gt-vs-rcb-royal-challengers-bangalore-vs-gujarat-titans-toss-update
ipl-2022-match-43-gt-vs-rcb-royal-challengers-bangalore-vs-gujarat-titans-toss-update

மும்பை:ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி பெங்களூரு அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். இந்த சீசனில் இரு அணிகளும் முதல்முறையாக மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 8 போட்டிகளில் 7 வெற்றி ஒரு தோல்வி என்ற கணக்கில் முதல் இடத்தில் உள்ளது. மறுப்புறம் பெங்களூரு அணி 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வி என்ற கணக்கில் 5ஆவது இடத்தில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஷாபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

குஜராத் டைட்டன்ஸ்:

ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா(கீப்பர்), ஹர்திக் பாண்டியா(கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி.

இதையும் படிங்க:IPL 2022 Double Header's: இன்றைய லீக் போட்டிகள்

Last Updated : Apr 30, 2022, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details