தமிழ்நாடு

tamil nadu

DC vs KKR: டெல்லிக்கு எதிராக கொல்கத்தா பந்துவீச்சு

By

Published : Apr 10, 2022, 4:07 PM IST

ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ipl-2022-kkr-opt-to-bowl-against-delhi-capitals
ipl-2022-kkr-opt-to-bowl-against-delhi-capitals

மும்பை: ஐபிஎல் தொடரின்19ஆவது லீக் ஆட்டம் மகாராஷ்டிராவின் பிராபோர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் தொங்கியது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதுகுறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், இந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக இருக்கும். அதனாலேயே பந்து வீச்சை தேர்வு செய்தேன். கொல்கத்தா அணியின் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்" என்றார்.

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள்:பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட்(கேப்டன்), ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்:அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி

இதையும் படிங்க:RCB vs MI: ஆர்சிபியிடம் அடிபணிந்தது மும்பை; தொடர் தோல்விகளால் திணறல்!

ABOUT THE AUTHOR

...view details