தமிழ்நாடு

tamil nadu

GT vs MI: மும்பைக்கு எதிராக குஜராத் பந்துவீச்சு

By

Published : May 6, 2022, 7:23 PM IST

ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி, மும்பை அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ipl-2022-gt-win-toss-elect-to-bowl-against-mi
ipl-2022-gt-win-toss-elect-to-bowl-against-mi

மும்பை: ஐபிஎல் போட்டியின் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

இதுகுறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், "நாங்கள் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளோம். அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றிபெறுவோம். இந்த சீசனில் எங்கள் அணியின் வெற்றி சீராக இருக்கிறது" என்றார்.

இதையடுத்து பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், "நாங்கள் அணியில் ஒரு மாற்றத்தை செய்துள்ளோம். ஹிருத்திக்கிற்கு பதிலாக எம் அஷ்வினை ஆட்டத்தில் சேர்ந்துள்ளோம். இந்த சீசன் எங்களுக்கு கடினமான பாதையாக அமைந்துவிட்டது. மீதமுள்ள ஆட்டத்தை சிறப்பாக விளையாடி முடிக்க விரும்புகிறோம். அதை எங்களால் செய்ய முடியும் என்று நம்புகிறோம்" என்றார்.

மும்பை இந்தியன்ஸ்:ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வ), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்.

குஜராத் டைட்டன்ஸ்:விருத்திமான் சாஹா (கீப்பர்), சுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், லாக்கி பெர்குசன், அல்சாரி ஜோசப், முகமது ஷமி.

இதையும் படிங்க:SRH vs DC: வார்னர் எடுத்த ரிவஞ் - ஹைதராபாத்தை ஹைஜாக் செய்தது டெல்லி!

ABOUT THE AUTHOR

...view details