தமிழ்நாடு

tamil nadu

IPL 2021 DC vs CSK: சென்னை பேட்டிங்; ரெய்னாவுக்கு ஓய்வு

By

Published : Oct 4, 2021, 7:17 PM IST

டெல்லி - சென்னை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். சென்னை அணியில் ரெய்னாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

IPL 2021 DC vs CSK
IPL 2021 DC vs CSK

துபாய்: கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.

இந்நிலையில், 50ஆவது லீக் ஆட்டத்தில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று (அக். 4) மோதுகிறது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

மீண்டும் பிராவோ, சஹார்

டெல்லி அணியில் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு ரிபல் படேல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். சென்னை அணியல் தரப்பில் சுரேஷ் ரெய்னா, சாம் கரன், கே.எம். ஆசிப் ஆகியோருக்கு பதிலாக ராபின் உத்தப்பா, டூவைன் பிராவோ, தீபக் சஹார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ரிபல் படேல், சிம்ரோன் ஹெட்மையர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ். தோனி (கேப்டன்), ஃபாப் டூ ப்ளேசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசில்வுட்.

இதையும் படிங்க: IPL 2021: பிறந்தநாள் பேபி பந்த் சிஎஸ்கே உடன் மோதல்; முதலிடம் யாருக்கு?

ABOUT THE AUTHOR

...view details