தமிழ்நாடு

tamil nadu

IPL 2021 CSK vs RR: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு!

By

Published : Apr 19, 2021, 10:12 PM IST

ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய சென்னை அணி 188 ரன்களை எடுத்துள்ளது.

CHENNAI SUPER KINGS
CHENNAI SUPER KINGS

மும்பை: ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டூ பிளேசிஸ், ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். முந்தைய ஆட்டத்தைப் போலவே ருத்ராஜ் இந்த ஆட்டத்திலும் 10(13) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின், சிறிதுநேரம் அதிரடி காட்டிய டூ பிளேசிஸ் 33(17) ரன்களில் மோரிஸிடம் விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியை போல் அரைசதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி 26(20) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராயுடு, ரெய்னாவுடன் இணைச்சேர்ந்து சிஎஸ்கேவின் ரன்ரேட்டை 10 ரன்கள் அளவிலேயே தொடர்ந்தனர். அதில் ராயுடு சக்காரியா பந்து வீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து 27 (17) ரன்களில் அவுட்டானார். அதே ஓவரில் ஆட்டம் முதலே தடுமாறி வந்த ரெய்னா 18(15) ரன்களில் வெளியேறினார். அதன்படி சென்னை அணி 14 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் எடுத்தது.

200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தோனியும் ஜடேஜாவும் ரன் வேகத்தை குறைக்கும்படி ஆடினர். இதில், மோரிஸ், சக்காரியா ஆகியோரின் ஓவர்களில் தலா ஒரு பவுண்டரி விளாசினார் தோனி. இருப்பினும் சக்காரியா வீசிய 18ஆவது ஓவரில், பட்லரிடம் கேட்ச் கொடுத்து தோனி 18(17) ஆட்டமிழந்தார்.

அதையடுத்து களம்கண்ட சாம் கரன் இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டினார். மறுமுனையில் ஜடேஜா 8(7) ரன்களில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.

இறுதி ஓவரில் சாம் கரனும், தாக்கூரும் ரன் அவுட்டாகி வெளியேற, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

ஒன்பதாவது வீரர் வரை பேட்ஸ் மேன்களை வைத்திருக்கும் சிஎஸ்கேவில், ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. சென்னை அணியில் அதிகபட்சமாக டூ பிளேசிஸ் 33 ரன்கள் எடுத்தார். ப்ராவோ ஆட்டமிழக்காமல் 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்திருந்தார்.

ராஜஸ்தான் தரப்பில் சக்காரியா 3 விக்கெட்டுகளையும், மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ABOUT THE AUTHOR

...view details