தமிழ்நாடு

tamil nadu

KKR vs RCB: டாஸ் வென்றார் கோலி; கொல்கத்தா பந்துவீச்சு

By

Published : Sep 20, 2021, 7:23 PM IST

கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

KKR vs RCB
KKR vs RCB

அபுதாபி: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம்கட்டப் போட்டிகள் நேற்று (செப். 19) தொடங்கின. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இளம் வீரர்கள் அறிமுகம்

இந்நிலையில், 31 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்று (செப். 20) மோதுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, கொல்கத்தா அணியை பந்துவீச அழைத்துள்ளது. பெங்களூரு அணியில் கேஎஸ் பாரத், கொல்கத்தாவில் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இளம் வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், கேஎஸ் பாரத், சச்சின் பேபி, யஷ்வேந்திர சஹால், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், ஹசரங்கா, கைல் ஜேமிசன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, சுனில் நைரன்,

ABOUT THE AUTHOR

...view details