தமிழ்நாடு

tamil nadu

சிபிஎல்லில் காயம்: சிஎஸ்கேவில் ஆடுவாரா டூ ப்ளசிஸ்?

By

Published : Sep 15, 2021, 5:33 PM IST

சென்னை சூப்பர் சிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டூ ப்ளசிஸுக்கு காயம் காரணமாக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

Faf duplessis injured before IPL
Faf duplessis injured before IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் டூ ப்ளசிஸ். தனது நேர்த்தியான விளையாட்டு உத்தியால், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். இவருக்கு கரிபியன் பிரிமியர் லீக்கில் ஆடும்போது இடுப்பு எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐபிஎல் ஆட்டத்தில் கலந்துகொள்வது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கரிபியன் பிரிமியர் லீக்கில் டூ ப்ளசிஸ் சரியான ஃபார்மில் இருந்தார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:US OPEN: ஜோகோவிச் கனவு நொறுங்கியது; முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றார் மெட்வெடேவ்!

ABOUT THE AUTHOR

...view details