தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் சாம்பியன் அணியின் முக்கிய வீரர் டி-20 போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம்!

By

Published : Nov 14, 2020, 5:05 PM IST

Updated : Nov 14, 2020, 5:14 PM IST

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், நியூசிலாந்து வேப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் சாம்பின் அணியின் முக்கிய வீரர் டி-20 போட்டியில் பங்கேற்பதில் சந்தேம்!
ஐபிஎல் சாம்பின் அணியின் முக்கிய வீரர் டி-20 போட்டியில் பங்கேற்பதில் சந்தேம்!

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய வேப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஐபிஎல் முடிவடைந்த நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட போல்ட் நியூசிலாந்து அணியின் சக வீரர்களான கேன் வில்லியம்சன், லாக்கி பெர்குசன், மிட்செல் சாண்ட்னர், ஜிம்மி நீஷாம், டிம் சீஃபர்ட் ஆகியோருடன் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்பினார். தற்போது அவர்கள் அனைவரும் கிறிஸ்ட்சர்ச்சில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதி முடிவடைகிறது. ஆனால், தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதற்கிடையில் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்தப் போட்டியில் கலந்துகொள்வாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக தனது குடும்பத்தைப் பிரிந்து இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு இரண்டு நாட்கள் முழுவதும் குடும்பத்துடன் செலவிடப் போவதாக போல்ட் கூறியுள்ளார்.

டிசம்பரில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தான் ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஹாமில்டன், வெலிங்டனில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Last Updated :Nov 14, 2020, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details