தமிழ்நாடு

tamil nadu

“நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு நம்பிக்கை உண்டு”- கோலி

By

Published : Oct 22, 2020, 2:41 PM IST

அபுதாபி: பலருக்கு ஆர்சிபி அணியின் திறன் மீது  நம்பிக்கை இல்லை, ஆனால் அணியின் வீரர்களுக்கு நம்பிக்கை இருந்தது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

virat kohli
virat kohli

ஐபில் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றப்பிறகு, பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் கேப்டன் விராட் கோலி, "சிராஜுக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு கொடுக்கலாம் என்று இறுதிநேரத்தில்தான் முடிவுசெய்தேன்.

வாஷிங்டன் சுந்தரை முதலில் பந்துவீச கொடுக்கவே நினைத்தேன். களத்தில் நாம் செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி நான் வெளிப்படையாக யோசித்திருக்கிறேன். எங்களிடம் திட்டம் ஏ மற்றும் பி உள்ளது.

அதை வீரர்கள் சரியான முறையில் செயல்படுத்துகிறார்கள். ஆர்சிபி மீது நிறைய பேருக்கு நம்பிக்கை இருப்பதாக நினைக்கவில்லை.

அணியின் வீரர்கள் தங்களது திறன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் அதுதான்முக்கியம், நீங்கள் உலகின் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அது அணிக்கு பலன்தராது. மோரிஸ் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை விரும்பி செயல்படுத்துகிறார்.

அவர் அணியில் பந்துவீச்சாளர்களை வழிநடத்திசெல்ல விரும்புகிறார். அவரது ஆற்றல் ஆச்சரியமாக இருக்கிறது. கடந்தாண்டு அவருக்கு ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது. நிறைய பேர் அவரை விமர்சித்தனர். அவர் கடுமையாக உழைத்த பலனை தற்போது காண்கிறார். "என்று அவர் கூறினார்.

முன்னதாக, முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் அற்புதமான பந்துவீச்சால் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 84/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிராஜ் வெறும் 8 ரன்களே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: 84 ரன்கள் இலக்கை எட்ட, 13 ஓவர்கள் எடுத்துக்கொண்ட ஆர்சிபி!

ABOUT THE AUTHOR

...view details