தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்!

By

Published : Sep 23, 2020, 5:00 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: Two-time champion KKR open campaign vs defending champs Mumbai Indians
IPL 2020: Two-time champion KKR open campaign vs defending champs Mumbai Indians

ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.23) நடைபெறவுள்ள நான்காவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

வலிமையான பேட்டிங், தரமான பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இன்றை ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

இந்த சீசனின் முதல் போட்டியிலேயே சென்னை அணியுடன் தோல்வியடைந்த, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா - டி காக்

டி காக், சவுரப் திவாரி, ஹர்த்திக் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், ரோஹித் சர்மா, பொல்லார்ட் போன்ற அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததாலும், அதேசமயம் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவும் அன்றைய போட்டியில் வழக்கத்திற்கு மாறாக ரன்களை வாரி வழங்கியதாலும் மும்பை அணி தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவியது.

ஹர்திக் பாண்டியா

தங்களது தவறுகளைத் திருத்தி கொண்டு இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கேகேஆர் அணி இந்த சீசனின் முதல் போட்டியையே பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. அதெற்கென கேகேஆர் அணியையும் குறைத்து மதிப்பிட இயலாது. ரஸ்ஸல், சுனில் நைரன் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் எந்த நேரமும் ஆட்டத்தின் போக்கை தங்களுக்குச் சாதகமாக மாற்றக்கூடியவர்கள்.

அதோடு இயன் மோர்கன், பாட் கம்மின்ஸ், டாம் பான்டன் என அதிரடி பட்டாளத்தையும் இந்தாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மேலும் சுழற்பந்துவீச்சில் சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுடன், நரைன், நித்தீஷ் ராணா ஆகியோர் எதிர் அணிக்கு சவால் விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதி, சுப்மன் கில், ரஸ்ஸல், ராணா, மோர்கன், பான்டன் என அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக கேகேஆர் அணி இந்த சீசனை தொடங்கவுள்ளது.

தினேஷ் கார்த்திக்

இரண்டாவது சீசனாக தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கும் கேகேஆர் அணி, இன்றைய ஆட்டத்தில் எப்படி செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேருக்கு நேர்:

மும்பை, கொல்கத்தா அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றி விகிதாசரத்தைப் பார்க்கும் பட்சத்தில் மும்பை அணி வலிமையாகத் தெரிகிறது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை மும்பை அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

மைதானம்:

இன்றைய போட்டி நடைபெறவுள்ள அபுதாபி மைதானமானது, பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என்பதால், மும்பை அணிக்கு இன்றைய போட்டியும் சவாலானதாகவே அமையும். ஏனெனில் கேகேஆர் அணியில் குல்தீப், நரைன் போன்ற சர்வதேச வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஜஸ்ப்ரித் பும்ரா

உத்தேச அணி:

கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), சுனில் நரைன், சுப்மன் கில், நித்தீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி, பிரசீத் கிருஷ்ணா.

ஷிவம் மாவி

மும்பை இந்தியன்ஸ்:ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, நாதன் குல்டர்நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : சிஎஸ்கேவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

Last Updated :Sep 25, 2020, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details