தமிழ்நாடு

tamil nadu

தோனி ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர்

By

Published : Oct 21, 2020, 1:16 PM IST

Updated : Oct 21, 2020, 1:54 PM IST

அபுதாபி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஜெர்சியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் காட்சியளிக்கும் புகைப்படத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தோனி ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர்!
தோனி ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர்!

அக்டோபர் 19ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடியதன் மூலம், 200 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை எம்.எஸ்.தோனி பெற்றார்.

அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் (play off) சுற்றிற்கு தகுதிப்பெற முடியும் என்ற நெருக்கடியான நிலையில், ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை அணி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக விளையாடிய பட்லர் 70 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்தபின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் மகேந்திர சிங் தோனியின் ஜெர்சியை கையில் வைத்திருந்தது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் தோனி தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் உடுத்திய சீருடையை பட்லருக்கு பரிசாக கொடுத்துள்ளதாக கூறி அப்புகைப்படம் பகிரப்பட்டது.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஜெர்சியுடன் பட்லர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய எம்.எஸ் தோனியின் ஜெர்சியுடன் இருக்கும் ஜோஸ்பட்லர் மதிப்புமிக்கவராக காட்சியளிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Oct 21, 2020, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details