தமிழ்நாடு

tamil nadu

இந்த பவுலிங்க வெச்சிட்டு ஒன்னு பண்ண முடியாது: கோலி விரக்தி

By

Published : Apr 6, 2019, 12:33 PM IST

பெங்களூரு: இக்கட்டான தருணத்தில், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் என பெங்களூரு அணியின் விராட் கோலி குற்றம் சாட்டியுள்ளார்.

கோலி ஆவேசம்

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில்,

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. எதிரணியில் ரஸல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆட்டத்தின் இக்கட்டாண தருணத்தில் இது போன்று மோசமாக பந்து வீசினால், தோல்விதான் அடைய முடியும். கடைசி நான்கு ஓவர்களில் 75 ரன்களை கட்டுப்படுத்தாத பந்துவீச்சாளர்கள், பின் எவ்வாறு இறுதி ஓவரில் 100 ரன்கள் இருந்தால் மட்டும் கட்டுப்படுத்துவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்தப் போட்டியில் நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை குறித்து ஆலோசிக்க வேண்டும். தற்போது அதைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியாது. தோல்வியில் இருந்து மீண்டு வர வீரர்களுக்கு சற்று நேரம் தர வேண்டும். அடுத்து போட்டியில் நாங்கள் விஸ்வரூபம் எடுத்து வெற்றிபெறுவோம் எனவும் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இந்தத் தொடரில் பெங்களூரு அணி தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை தழுவி இருந்ததால், கொல்கத்தா அணியிடம் வெற்றிபெற்று மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், கொலகத்தா அணியின் ஆல்ரவுண்டர் அவர்களது கனவில் மண்ணை வாரி போட்டார். 206 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், களத்தில் இருந்த ரஸல் தனது அசுரத்தனமான பேட்டிங்கை வெளிபடுத்தினார். 13 பந்துகளில் 7 சிக்சர், ஒரு பவுண்டரி என 48 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் கொல்கத்தா அணி 19.1 ஓவரிலேயே 206 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள போட்டியில், பெங்களூரு அணி டெல்லி அணியுடன் மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு நூலளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details