தமிழ்நாடு

tamil nadu

ஸ்மித் கேப்டன்சியில் டெல்லியை வீழ்த்துமா ராஜஸ்தான்?

By

Published : Apr 22, 2019, 4:03 PM IST

Updated : Apr 23, 2019, 3:41 PM IST

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்றவுள்ள ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தவான்


12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு அணிகளும் ப்ளே - ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றையப் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

டெல்லி அணியைப் பொறுத்தவரையில் 10 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றுபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணி மூன்று வெற்றிகளுடன் ஏழாவது இடத்தில் விளையாடி வருகிறது. ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஒரு போட்டியில் தோற்றாலும் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

இந்நிலையில், கடந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் ரஹானேவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது. அதற்கு பலனளிக்கும் வகையில் மும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. எனவே ஸ்மித் கேப்டன்சியில் ராஜஸ்தான் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளதால் இன்றையப் போட்டியில் டெல்லி அணிக்கு கடும் சவாலளிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவான்

டெல்லி அணியைப் பொறுத்தவரையில் பந்துவீச்சில் வலிமையாக உள்ள நிலையில், பேட்டிங்கில் தவானைத் தவிர மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா ஆகியோர் ரன்கள் குவிக்க முயற்சிக்க வேண்டும்.

டெல்லி அணி

அதேபோல் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லர் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதால், ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது இடத்தை நிரப்பும் வீரரை விரைவில் கண்டறியவில்லை என்றால் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி வீரர்களான குல்கர்னி, ஆர்ச்சர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இந்தப் போட்டியிலும் அதுதொடர்ந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் ஸ்மித், பின்னி, சாம்சன், திரிபாதி ஆகியோர் ஃபார்மிற்கு திரும்பியுள்ள நிலையில், இன்றையப் போட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

RR vs DD preview


Conclusion:
Last Updated : Apr 23, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details