தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல்: மும்பை - பெங்களூரு இன்று பலப்பரீட்சை!

By

Published : Mar 28, 2019, 11:26 AM IST

Updated : Mar 28, 2019, 12:09 PM IST

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது.

ரோஹித் - விராட் கோலி

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடுகிறது.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஹெட்மயர், பார்திவ் படேல், மொயின் அலி என சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் ஒருங்கிணைந்து ஆடுவதில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. விராட் கோலி தொடக்கத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து பவர்பிளே ஓவர்களுக்கு பிறகு அதிரடிக்கு மாறுவது அணிக்கு நல்லது. டி வில்லியர்ஸை மூன்றாம் இடத்தில் களமிறக்காமல் ஹெட்மயர்-க்கு பின் களமிறக்குவது ஏன் எனத் தெரியவில்லை.

டி வில்லியர்ஸ் - ஹெட்மயர்

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டிம் செளதி, சிராஜ், மொயின் அலி, சாஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி என மிரட்டலாகவே உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது பெங்களூரு அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியைப் பொறுத்தவரையில், ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் ரோஹித் சர்மா ஃபார்மிற்கு திரும்புவது அணிக்கு அசுர பலமளிக்கும். சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்திக், குருணால், யுவராஜ் சிங், டி காக், இஷான் கிஷன் என பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். இளம் வீரர் இஷான் கிஷனுக்கு முதல் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை. இந்த போட்டியில் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோலி-ஜாகீர்-பும்ரா

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த பும்ரா மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளதையடுத்து, இன்றையப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுறது. மேலும் மார்கண்டே, மலிங்கா, பென் கட்டிங், குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா என பலம் வாய்ந்த பவுலிங் கூட்டணி பெங்களூரு அணியை பதம் பார்க்கக் காத்திருக்கிறது.

பும்ரா

மேலும், பெங்களூரு மைதானத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், ரசிகர்களிடையே ரோஹித் சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், இரண்டு முக்கிய அணிகள் மோதவுள்ள போட்டி என்பதாலும் ரசிகர்களிடையே இப்போட்டி கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.


Last Updated : Mar 28, 2019, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details