தமிழ்நாடு

tamil nadu

நடுவரின் அலட்சியத்தால் மும்பை வெற்றி!

By

Published : Mar 29, 2019, 7:45 AM IST

பெங்களூரு: நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ராயல் லேஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 48, சூர்யகுமார் யாதவ் 38, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணி தரப்பில் சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 188 ரன் இலக்குடன் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் மொயின் அலி, பார்திவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மொயின் அலி 13, பார்தீவ் பட்டேல் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மறுமுனையில், நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்களை எடுத்திருந்ததது.

இதன் பின், ஹெட்மயர், ஆவுட் ஆனாலும், மறுமுனையில் களத்தில் இருந்த டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைக்க கடினமாக போராடினார்.

கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டபோது, பும்ரா சிறப்பாக பந்து வீசினார். ஐந்து ரன்களை தந்தது மட்டுமின்றி, காலின் டி கிராண்ட்ஹொமின் விக்கெட்டையும் சாய்த்தார்.

இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது, மலிங்கா வீசிய முதல் பந்தை ஷிவம் துபே சிக்சர் விளாசினார். இதனால்,பெங்களூரு அணி வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களது ஆசையை மலிங்கா களைத்துவிட்டார். பின் அடுத்த மூன்று பந்துகளில் மூன்று ரன்களை மட்டுமே வழங்கினார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் எட்டு ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டிவில்லியர்ஸ் சிங்கில் அடிக்க மும்பை அணியின் வெற்றி உறுதியானது.

கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மலிங்காவின் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால், மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ராயல் லேஞ்சர்ஸ் பெங்களூரு

ரீபிளேவின் பார்த்தபோது, மலிங்கா வீசிய கடைசி பந்து நோபால் என்பது தெரியவந்தது. ஆனால், நடுவர் இதை கண்டுகொள்ளதாதது ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:



பெங்களூருக்கு எதிரான இன்றையப் போட்டியில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.



பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் லேஞ்சர்ஸ் பெங்களூரு அணியுன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.



அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 48, சூர்யகுமார் யாதவ் 38, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணி தரப்பில் சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



இதைத்தொடர்ந்து, 188 ரன் இலக்குடன் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் மொயின் அலி, பார்திவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மொயின் அலி 13, பார்திவ் பட்டேல் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மறுமுனையில், நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்திய கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்களை எடுத்திருந்ததது.



இதன் பின், ஹெட்மயர்,  ஆவுட்ஆனாலும், மறுமுனையில் களத்தில் இருந்த டிவில்லயர்ஸ் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைக்க கடினமாக போராடினார். 



கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது, பும்ரா சிறப்பாக வீசினார். ஐந்து ரன்களை தந்தது மட்டுமின்றி, காலின் டி கிராண்ட்ஹொமின் விக்கெட்டையும் சாய்த்தார்.



இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது, மலிங்கா வீசிய முதல் பந்தை ஷிவம் துபே சிக்சரை விளாசினார். இதனால்,பெங்களூரு அணி வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்தனர்.  ஆனால் அவர்களது ஆசையை மலிங்கா களைத்துவிட்டார். பின் அடுத்த மூன்று பந்துகளில் மூன்று ரன்களை மட்டுமே வழங்கினார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டிவில்லியர்ஸ் சிங்கில் அடிக்க மும்பை அணியின் வெற்றி உறுதியானது.



கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மலிங்காவின் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால், மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.



ரீபிளேவின் பார்த்தபோது, மலிங்கா வீசிய கடைசி பந்து நோபால் என்பது தெரியவந்தது. ஆனால்,நடுவர் இதை கண்டுக்கொள்ளதாதது, ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. 

 


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details