தமிழ்நாடு

tamil nadu

ILT20: துபாய் கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகும் யூசுப் பதான்!

By

Published : Feb 6, 2023, 10:18 AM IST

துபாயில் நடைபெற்று வரும் இன்டர்நேஷனல் லீக் கிரிக்கெட் தொடரில், துபாய் கேப்பிடல்ஸ் அணிக்கு இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யூசுப் பதான்
யூசுப் பதான்

துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்டர்நேஷனல் லீக் கிரிக்கெட் தொடரில் துபாய் கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் யூசுப் பதான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை துபாய் கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டிஸ் அணியை சேர்ந்த ராவ்மன் பவல் துபாய் கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.

ராவ்மன் தலைமையில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தொடரை தோல்வியை சந்தித்து வருவதை அடுத்து அவருக்கு பதிலாக யூசுப் பதானை அணி நிர்வாகம் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆல் ரவுண்டர யூசுப் பதான், இன்டர்நேஷனல் லீக்கில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இது தொடர்பாக துபாய் கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "யூசுப் பதான் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக செயல்படுவார்" என தெரிவித்துள்ளது. அதேசமயம் ராவ்மன் பவல் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்ட்டது குறித்து அணி நிர்வாகம் எந்த விளக்கமும் தரவில்லை. யூசுப் பதான் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி அதிக ரன்களை குவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் யூசுப் பதான் 174 போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 204 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதமும், 13 அரை சதமும் அடங்கும். யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

இதையும் படிங்க: கடல் வழியாக வரும் ஒலிம்பிக் ஜோதி.. மார்சில் நகரில் ஜோதி ஓட்டம் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details