தமிழ்நாடு

tamil nadu

IND Vs WI: அஸ்வினின் அபார ஆட்டம்.. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

By

Published : Jul 15, 2023, 10:35 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை இந்திய அணி பெற்றது.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
india won by 141 runs

டொமினிகா: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் தேதி டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் - இண்டீஸ் ஆட்டமிழந்தது. அலீக் அதானஸி 47 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக அமைந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்களும் எடுத்தனர்.

அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரோகித் - ஜெய்ஸ்வால் கூட்டணி அபாரமாக விளையாடி 229 ரன்கள் சேர்த்த நிலையில் பாட்னர்ஷிப் பிரிந்தது. ரோகித் சர்மா 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் வந்த வேகத்தில் 6 ரன்களுக்கு வெளியேரினார்.

இதனை அடுத்து களம் கண்ட கோலி தனது சிறப்பான ஆட்டத்தை ஜெய்ஸ்வாலுடன் தொடர்ந்தார். அறிமுக ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸர் உடன் 387 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ரஹானே 3 ரன்களுக்கு வெளியேற, ஜடேஜா - கோலி இணை பொறுமையாக விளையாடியது. கோலி 5 பவுண்டரிகளுடன் 76 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 421 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. ஜடேஜா 37 ரன்கள், இஷான் கிஷன் 1 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.

இதனை அடுத்து, 272 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக வந்த வேகத்தில் வெளியேரினர். 50.3 ஒவர்களில் 130 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது. அலீக் அதானஸி 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்தியா தனது பந்துவீச்சு தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், சீராஜ் 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஒரு இன்னிங்ஸ் பேட்டிங் செய்யாத இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களும் எடுத்து மொத்தம் 12 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் ஆனார். இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வருகிற 20ஆம் தேதி டிரினிடாட்டில் வைத்து தொடங்குகிறது.

இதையும் படிங்க:IND VS WI: 2வது நாள் முடிவில் இந்தியா 312/2:ரோஹித், ஜெய்ஸ்வால் சதம்!

ABOUT THE AUTHOR

...view details