தமிழ்நாடு

tamil nadu

India VS South Africa: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 1:39 PM IST

World Cup Cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (நவ. 5) நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

IND VS SA India won the toss and elected to bat
IND VS SA: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

கொல்கத்தா : 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று (நவ. 5) மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்குகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிச்சந்திரன் அஷ்வின், கிருஷ்ணா.

தென் ஆப்பிரிக்கா அணி:குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி ஸ்ஹுல்வே, தப்ரைசில் ஷ்ஹம்சி, தப்ரைஸ்ஹில்வே ரீசா ஹென்ட்ரிக்ஸ், லிசாட் வில்லியம்ஸ்.

இதையும் படிங்க:400 கோல்கள் விளாசி ரொனால்டோ புது சாதனை! அப்படி என்ன சாதனை தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details