தமிழ்நாடு

tamil nadu

SA Vs NED: தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணி இன்று மோதல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 12:26 PM IST

Cricket World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகிறது.

South africa vs Netherlands
South africa vs Netherlands

தர்மசாலா: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அதன் 15வது லீக் ஆட்டத்தில் இன்று (அக்.19) பிற்பகல் 2 மணிக்கு தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணி மோதுகிறது. இந்த ஆட்டம் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை, தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலேயே ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 428 ரன்களை குவித்தது. அதன்பின் இலங்கை அணியையும் ஆல் அவுட் செய்து, 102 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி, முதல் போட்டியிலேயே தாங்கள் யார் என்று நிரூபித்தனர்.

அதேபோல், இரண்டாவது போட்டியில், இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியை திக்குமுக்காட செய்ய வைத்தது, தென்னாப்பிரிக்கா. தொடர்ந்து பந்து வீச்சில் அசத்திய தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கச் செய்து, 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் அவர்களது நெட் ரன்ரேட் +2.360-வில் உள்ளது.

குறிப்பாக, தொடக்க வீரரான டி காக் இரண்டு போட்டிகளிலுமே சதம் அடித்து அசத்தினார். அதேபோல், வான் டெர் டுசென் மற்றும் மார்க்ரம் இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினர். பந்து வீச்சில் ரபாடா இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், சுழற்பந்து வீச்சில் மகாராஜ் பலம் சேர்க்கும் விதமாக உள்ளார்.

நெதர்லாந்து அணியை பொறுத்தவரை, கடந்த இரு போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ளனர். ஆனாலும், நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். மேலும், கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளனர். அதனை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதேநேரம், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்திய யூகத்தை இவர்கள் ஆலோசிக்க வேண்டும்.

கணிக்கப்பட்ட இரு அணிக்களுக்கான பிளேயிங் 11

தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி என்கிடி.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.

இதையும் படிங்க:பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி ரோஹித் சர்மாவையே சாரும்: முஷ்டாக் முகமது புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details