தமிழ்நாடு

tamil nadu

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் உயிரிழப்பு - பலர் இரங்கல்!

By

Published : May 15, 2022, 10:46 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்றிரவு(மே 14) கார் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ட்விட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸி. ஜாம்பவான் உயிரிழப்பால் ட்விட்டரில் சோகம்
ஆஸி. ஜாம்பவான் உயிரிழப்பால் ட்விட்டரில் சோகம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46) நேற்றிரவு (மே 14) 10.30 மணியளவில் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குயின்ஸ்லாந்தில் உள்ள ஹெர்வி ரேஞ்ச் சாலையில் நடந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 1975ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் பிறந்தார். 1999 - 2007ஆம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது.

அப்போது, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தவர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்றிரவு கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய இந்த மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு'

ABOUT THE AUTHOR

...view details