தமிழ்நாடு

tamil nadu

வேட்டையாடக் காத்திருக்கும் இந்தியாவிடமிருந்து தப்புமா இங்கிலாந்து?

By

Published : Jun 30, 2019, 10:30 AM IST

பர்மிங்ஹாம்: உலகக்கோப்பைத் தொடரின் 38ஆவது ஆட்டத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

கோலி

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்ததாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள போட்டிதான். தொடரை வெல்லும் அணிகள் என கணிக்கப்பட்ட இரு அணிகளில் யார் சிறந்தவர் என்பதைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் உலகக்கோப்பை தொடர் தொடங்கிய பின்னர், இந்த அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது.

கே.எல். ராகுல்

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு தலைவலி, நான்காவது வீரராக களமிறங்கும் விஜய் சங்கர் சிறப்பாக ஆடாதது மட்டுமே. மற்ற அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்கள். விஜய் சங்கர் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் 58 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆல் ரவுண்டர் என்பதால் வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் விஜய் சங்கரை கோலி பந்துவீச அழைக்கவே இல்லை. இதனால் இன்றைய போட்டியில் விஜய் சங்கர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால், பேட்ஸ்மேன் மட்டுமே இந்திய அணியின் தேவை என்றால் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

விஜய் சங்கர்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இலங்கையிடம் அடி வாங்கி, பாகிஸ்தானிடம் உதைபட்டு தற்போது அரையிறுதி வாய்ப்பு தொங்கலில் உள்ளது. இதனால் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பெயர்ஸ்டோவ் - ஸ்டோக்ஸ்

அதேபோல், இங்கிலாந்து அணியின் மொயின் அலி இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எளிதாக வீழ்த்துவேன் எனக் கூறி விராட் கோலிக்கு சவால் விடுத்துள்ளார். இந்த சவால் விடுத்ததுபோல் இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டும் என அவ்வணியின் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

இன்றையப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும், இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோர்கன்

மேலும் புதிய ஜெர்சியுடன் களமிறங்கவுள்ள இந்திய அணியைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

CWC19: IND vs ENG Preview


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details