தமிழ்நாடு

tamil nadu

வில்லியம்சனுடன் நேரம் செலவிட்டதை வாழ்வில் மறக்கமுடியாது...!

By

Published : Feb 3, 2020, 8:38 AM IST

நியூசிலாந்து அணியை வழிநடத்துவதற்கு வில்லியம்சனே சரியான நபர் என்றும், அவருடன் செலவழித்த நேரங்களை வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாது எனவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

williamson-and-i-have-similar-mindsets-reveals-kohli
williamson-and-i-have-similar-mindsets-reveals-kohli

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஐந்தாவது டி20 போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் போட்டியில் களமிறங்காமல் ஓய்வில் இருந்தனர். இதனால் நியூசிலாந்து பேட்டிங்கின்போது விராட் - வில்லியம்சன் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

விராட் கோலி - கேன் வில்லியம்சன்

போட்டி முடிவடைந்த பின் வில்லியம்சன், நியூசிலாந்து கிரிக்கெட் குறித்து விராட் கோலி பேசினார். அதில், ''நாங்கள் (வில்லியம்சன்) இருவரும் ஒரே மாதிரியான தத்துவங்களைத்தான் பின்பற்றுகிறோம். ஒரேபோன்று மனநிலையில்தான் இருக்கிறோம். உலகின் உள்ள பல்வேறு மூலையில் இருக்கும் அனைவரும் ஒரே மொழி பேசி, ஒரே விஷயங்களை சிந்திப்பதும், ஒரே இலக்கினை நோக்கிப் பயணிப்பதும் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி சரியான தலைவரின் கைகளில்தான் இருக்கிறது. அணியை வழிநடத்த கேன் வில்லியம்சன்தான் சரியான நபர். ஒருசில தொடர்களில் அடைந்த தோல்வியால் தலைமையை அளவிடவும் முடியாது, தீர்மானிக்கவும் முடியாது.

விராட் கோலி - கேன் வில்லியம்சன் - ரிஷப் பந்த்

இன்று நாங்கள் வாழ்க்கையைப் பற்றியும், விளையாட்டைப் பற்றியும் சிலவற்றைப் பேசினோம். அதனால்தான் சொல்கிறேன். நியூசிலாந்து அணியை வழிநடத்த கேன் வில்லியம்சன் மட்டுமே சரியான நபர். அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணி கொஞ்சம் நற்பேறுடனும், அதீத வலிமையுடன் நிச்சயம் மீண்டுவரும். உலகின் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எந்த வகையிலும் ஒதுக்கமுடியாத அணி நியூசிலாந்து. அதனால்தான் அவர்களின் கிரிக்கெட்டை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். வில்லியம்சனுடன் பேசியதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன்.

இந்தத் தொடரில் நாங்கள் வெற்றிபெற்றது பெருமையாக உள்ளது. ட்ரெஸிங் ரூமில் எப்போதும் வெற்றியைப் பற்றிய ஆலோசனைகள் மட்டுமே இருக்கும். தற்போது அது செயல்பாடுகளில் வெளிப்படும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நானும், ரோஹித்தும் இல்லாதபோது இளம் வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.

அவர்கள் அழுத்தத்தைக் கையாண்டவிதம் சிறப்பாக இருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருந்தது. ஒரு சீனியர் வீரராக நிச்சயம் எனக்கு மன அமைதியைக் கொடுத்தது. இந்தச் சூழலைத் தொடர்ந்து பல காலம் கொண்டு செல்ல வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: 5-0 என நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா!

dd


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details