தமிழ்நாடு

tamil nadu

கரோனாவிலிருந்து மீண்ட அதிரடி மன்னன் அப்ரிடி!

By

Published : Jul 3, 2020, 3:14 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் தனது குடும்பத்தரோடு இணையவுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

shahid-afridi-back-to-family-time-after-wife-and-kids-test-negative-for-covid
shahid-afridi-back-to-family-time-after-wife-and-kids-test-negative-for-covid

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிடிக்கு கடந்த ஜூன் மாதம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அப்ரிடி, தான் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்ரிடியின் ட்விட்டர் பதிவில், "சமீபத்தில் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொண்ட என் மனைவி மற்றும் மகள்கள் அக்ஸா, அன்ஷாவின் பரிசோதனை முடிவுகள், தொற்று இல்லை என வந்துள்ளது. இதையடுத்து நானும் தற்போது எனது குடும்பத்தினரோடு இணையவுள்ளேன். அதேசமயம் ரசிகர்களின் வேண்டுதலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இறைவன் உங்களையும், உங்களது குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details