தமிழ்நாடு

tamil nadu

4ஆவது டெஸ்டிலிருந்து விலகும் சாம் கர்ரன் - காரணம் இதுதான்!

By

Published : Feb 19, 2021, 12:33 PM IST

இந்தியாவுடனான ஒருநாள், டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன் இடம்பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Sam Curran to miss 4th Test, to arrive with limited-overs squad
Sam Curran to miss 4th Test, to arrive with limited-overs squad

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து அணியுடனான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சாம் கர்ரன் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுடனான ஒருநாள், டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன் இடம்பெற்றுள்ளதால், நான்காவது டெஸ்ட் போட்டில் அவருக்கு ஓய்வளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான சாம் கர்ரன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசன் முதல் விளையாடிவருகிறார். மேலும் நடப்பாண்டு ஐபிஎல் சீசன் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அகமதாபாத் புறப்பட்ட இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details