தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் ஏலம்: மார்க் வுட் விலகல்!

By

Published : Feb 18, 2021, 12:33 PM IST

நடப்பாண்டிற்கான ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் அறிவித்துள்ளார்.

Mark Wood pulls out of IPL 2021 Player Auction
Mark Wood pulls out of IPL 2021 Player Auction

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான குறுகிய அளவிலான வீரர்கள் ஏலம் இன்று (பிப். 18) சென்னையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 61 வீரர்கள் தேர்வுசெய்யப்படவுள்ள இந்த ஏலத்தில் 292 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர். இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் அறிவித்துள்ளார்.

இது குறித்து மார்க் வுட் கூறுகையில், ஐபிஎல் தொடரின் ஏலத்திலிருந்து விலகுகிறேன். ஐபிஎல் தொடர் நடைபெறும் காலத்தில் நான் எனது குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புவதால் இம்முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் ஆரம்ப விலையாக இரண்டு கோடி ரூபாய் நிர்ணயம்செய்யப்பட்டிருந்தது. மேலும் எட்டு வீரர்களுக்கு மட்டுமே ஆரம்ப விலையாக இரண்டு கோடி ரூபாய் நிர்ணயம்செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: அணிகளின் உத்தேச வீரர்கள் தேர்வு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details