தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு நேரத்தில் ராகுலுக்கு இணைய வழி வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்#HBDKLRAHUL

By

Published : Apr 18, 2020, 7:13 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், தனது 28ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

Let's celebrate together post the lockdown: India teammates wish Rahul
Let's celebrate together post the lockdown: India teammates wish Rahul

கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இம்மாதம் 15ஆம் தேதி, தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் கே.எல்.ராகுல், இன்று தனது 28ஆவது பிறந்தநாள் விழாவைத் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான கே.எல். ராகுல், தனது அதிரடி பேட்டிங்கால் இன்று இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல்
  • இதுவரை இந்திய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல், ஐந்து சதங்கள், 11 அரை சதங்கள் என 2,006 ரன்களை குவித்துள்ளார்.
  • இந்திய அணிக்காக 32 ஒருநாள் போட்டிகளில் நான்கு சதம், ஏழு அரை சதங்களை விளாசி 1,239 ரன்களை சேர்த்துள்ளார்.
  • அதேபோல் 42 சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ள ராகுல் இரண்டு சதங்கள், 11 அரை சதங்கள் என 1,127 ரன்களை விளாசியுள்ளார்.
  • மேலும் இவர் தற்போது தொடக்க வீரர், இடைநிலை வீரர், ஃபினிஷர் என இந்திய அணியின் அனைத்து ரோல்களிலும் கலக்குவது மட்டுமில்லாமல், விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்திய அணி வீரர்கள் பலரும் கே.எல்.ராகுலுக்கு ட்விட்டர் வாயிலாக, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவற்றில் சில...

  • இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தனது ட்விட்டரில், 'இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நண்பா. நல்ல உடல்நலத்துடனும், சிறப்பாக செயல்படும் திறனுடன் இந்தாண்டு உனக்கு நன்மையைத் தரட்டும்' என்று வாழ்த்து கூறியுள்ளார்.
  • யுஸ்வேந்திர சஹால் தனது ட்விட்டரில், 'பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா. நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக இருக்க என்னுடைய வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.
  • ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில், 'இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கே.எல். ராகுல். இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், வழக்கம் போல் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்க விடத் தயாராக இரு’ என்று பதிவிட்டுள்ளார்.
  • இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் தனது ட்விட்டர் பதிவில், 'இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகாள் ராகுல். சிறந்த உடல் நலத்துடன் இந்த வருடம் உனக்கு அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன்' எனப்பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் நான் படைத்த சாதனை, என் வாழ்வை முழுவதுமாக மாற்றியது - பிரண்டன் மெக்குலம்!

ABOUT THE AUTHOR

...view details