தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் 14: புது பெயருடன் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

By

Published : Feb 16, 2021, 10:14 AM IST

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனிலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி புதிய பெயருடன் களமிறங்கும் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

KXIP opt for name change, to be called Punjab Kings from IPL-14
KXIP opt for name change, to be called Punjab Kings from IPL-14

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்ககப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் வழங்கிவிட்டன.

இந்நிலையில், 13 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து புதிய பெயருடன் விளையாடும் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், “கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நீண்ட காலமாக பெயரை மாற்ற திட்டமிட்டிருந்தது. அதனால் வரவுள்ள ஐபிஎல் தொடருக்கு முன் அணியின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே இது அந்த அணியின் திடீர் முடிவு அல்ல” என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வருகிற சீசன் முதல் ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

இதுவரை ஐபிஎல் தொடரின் அனைத்து சீசன்களிலும், விளையாடியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒருமுறை மட்டுமே இறுதி போட்டி வரை முன்னேறியது. மேலும் கடந்தாண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீயே ராஜா, நீயே மந்திரி- அஸ்வினை புகழ்ந்து தள்ளும் ட்விட்டர்வாசிகள்!

ABOUT THE AUTHOR

...view details