தமிழ்நாடு

tamil nadu

டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்... கேப்டன்சி மாற்றம் எடுபடுமா?

By

Published : Oct 16, 2020, 7:13 PM IST

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ipl-13-mi-vs-kkr-toss-update
ipl-13-mi-vs-kkr-toss-update

ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது.

சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதோடு, கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் பதவி விலகியுள்ளதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த போட்டியில் கேகேஆர் அணி தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் டாம் பாண்டன், நாகர்கோட்டி ஆகியோரு பதிலாக கிறிஸ் க்ரீன், சிவம் மாவி களமிறங்கவுள்ளனர். அதேபோல் மும்பை அணியில் பட்டின்சனுக்கு பதிலாக கவுல்டர்நைல் இடம்பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:டி காக், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்ணால் பாண்டியா, பும்ரா, நாதன் கவுல்டர்நைல், போல்ட், ராகுல் சஹார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்: சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதிஷ் ராணா, ரஸ்ஸல், கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, தினேஷ் கார்த்திக், பிரசித் கிருஷ்ணா, கிறிஸ் க்ரீன், சிவம் மாவி.

ABOUT THE AUTHOR

...view details