தமிழ்நாடு

tamil nadu

சுவாரஸ்யமான பிட்ச்கள் தயாரித்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெறும்!

By

Published : Aug 26, 2019, 6:47 AM IST

சுவாரஸ்யமான பிட்ச்களை தயாரித்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் புத்துயிரோடு இருக்கும், மாறாக ஃபளாட் பிட்ச்களோடு (flat pitch) கிரிக்கெட்டை ஆடினால் டெஸ்ட் கிரிக்கெட் இதேபோன்று சவால்களோடு தான் தொடர்ந்து பயணிக்கும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Sachin Tendulkar

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார். அதில், பந்துகளை அற்புதமாக ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் லபுஸ்சக்னே கடந்துபோகிறார் (leave). பொதுவாக ஃபளாட் பிட்ச்களில் அந்த பந்துகளை தேர்டு மேன் (thirdman) திசையில் அடித்துவிட்டு ஒரு ரன்னை எடுப்பார்கள். ஆனால் அந்த பிட்ச்-ல் அவ்வாறு செய்தால், நிச்சயம் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு பெவிலியின் திரும்ப வேண்டியது தான்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படும் பிட்ச்கள் தான் அவ்வடிவத்தின் இதயம். சிறந்த பிட்ச்கள் கொடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட் போன்று மிகச்சிறந்த சுவாரஸ்யத்தை வேறு எந்த வடிவத்தாலும் கொடுக்க முடியாது. சிறந்த பவுலிங், சிறந்த பேட்டிங், சிறந்த மொமண்ட்ஸ் என ஒரே போட்டியில் கிரிக்கெட்டின் ருசியை ரசிகர்கள் அறியலாம்.

ஸ்மித் - ஆர்ச்சர்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் - ஆர்ச்சர் இருவருக்கும் இடையிலான போட்டி மனப்பான்மை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக இங்கிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றதை பற்றி யாரும் பேசுவதேயில்லை. தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட் ஈர்த்துள்ளதற்கு அந்த பிட்ச்களின் தன்மையும் முக்கிய காரணம்.

சுவாரஸ்யமான பிட்ச்களை தயாரித்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் புத்துயிரோடு இருக்கும். அதற்கு மாறாக ஃபளாட் பிட்ச்களைக் கொண்டு கிரிக்கெட்டை ஆடினால் டெஸ்ட் கிரிக்கெட் இதேபோன்று சவால்காளோடு தான் தொடர்ந்து பயணிக்கும்.

வெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிவித்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் சுவாரஸ்யமான ஒன்றாக மாறிவிடாது. அதற்கேற்ப பிட்ச்களும் தயாரிக்கப்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details