தமிழ்நாடு

tamil nadu

தலயின் நேர்கொண்டபார்வை, தளபதியின் சிங்கப் பெண்ணே - தெறிக்கவிடும் ஹர்பஜன்!

By

Published : Oct 8, 2019, 10:13 PM IST

பெண்களுக்கு வித்தியாசமான முறையில் விஜய தசமி வாழ்த்து சொல்லி ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

harbhajan

இந்தியாவின் நட்சத்திர கிரிகெட் வீரர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அணியில் பங்கேற்றார். அன்று முதல் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து தெறிக்கவிடுவார்.

இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "துர்கை அம்மன் துணை!! பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது தலயின் நேர்கொண்டபார்வை. அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழிய வீரம் கொண்டு பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் எழுந்து வாருங்கள் தளபதியின் சிங்கபெண்களே.இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த வித்தியாசமான ட்விட்டர் வாழ்த்து பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிக்கலாமே: எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் - மகளின் குறும்பை குறிப்பிட்ட தோனி

Intro:Body:

https://www.polimernews.com/dnews/83875


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details