தமிழ்நாடு

tamil nadu

தர்மசாலாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகள்?

By

Published : Dec 19, 2020, 1:16 PM IST

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான போட்டிகள் தர்மசாலாவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

Exclusive: BCCI treasurer Arun Dhumal opens up about venues for T20 WC 2021
Exclusive: BCCI treasurer Arun Dhumal opens up about venues for T20 WC 2021

இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று தர்மசாலாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஈடிவி பாரத்திற்குப் பேட்டியளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமல், இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூர் போட்டிகள்:

இது குறித்து பேசிய அருண் துமல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் போட்டிகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்தக் கூட்டத்தின்போது இமாச்சலப் பிரதேச மாநில நிதி அமைச்சராக உள்ள அனுராக் தாக்கூரும் முதல் முறையாக பங்கேற்றார். இக்கூட்டத்திற்கு வருகைதந்த அனுராக் தக்கூருக்கு இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.

ஹெச்.பி.சி.ஏ. மைதானம்:

தொடர்ந்து பேசிய அருண் துமல், கரோனா வைரஸ் காரண்மாக ஹெச்.பி.சி.ஏ. கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். இருப்பினும் வரவுள்ள உள்ளூர் தொடர்களில் பார்வையாளர்களை அனுமதிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறோம்.

சயீத் முஷ்டாக் அலி

அதேசமயம் சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான மைதானங்களில் ஹெச்.பி.சி.ஏ. மைதானம் தேர்வுசெய்யப்படாமல் உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ரஞ்சிகோப்பைத் தொடரை இம்மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஹெச்.பி.சி.ஏ. செய்துவருவதாகத் தெரிவித்தார்.

உலகக்கோப்பை டி20:

உலகக்கோப்பை டி20 போட்டிகள் தர்மசாலாவில் நடைபெறுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அருண் துமல், டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்துவதற்காக அனைத்து சர்வதேச கிரிக்கெட் மைதானங்களும் தயர்படுத்தப்பட்டுவருகின்றன.

அதில் சிறந்த ஏழு மைதானங்களைத் தேர்வுசெய்து உலகக்கோப்பைத் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த ஏழு மைதானங்களில் தர்மசாலாவும் நிச்சயம் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன்: வீரர்களுக்கு தனிமைப்படுத்துதல் காலம் கட்டாயம்!

ABOUT THE AUTHOR

...view details