தமிழ்நாடு

tamil nadu

மெல்போர்னில் மாஸ் காட்டிய அஸ்வின் - முரளி சாதனை முறியடிப்பு

By

Published : Dec 29, 2020, 7:59 PM IST

மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

Ashwin
Ashwin

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. அடிடெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி கொடுத்தது.

அஸ்வின் சாதனை

இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஆஸி. வீரர் ஜோஸ் ஹேசல்வுட் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டியில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார். இதுவரை 192 இடது கை பேட்மேன்களின் விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.

இதற்கு முன் இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 191 இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்துள்ளார்.

இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க:கடந்த 10 ஆண்டுகளில் மனதுக்கு நெருக்கமான தருணங்களை பகிர்ந்த கோலி...

ABOUT THE AUTHOR

...view details